திருபல்லாண்டு - 6 ஆம் திருவந்தாதி
" எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி
அரியை யழித்தவனை
பந்தனை த லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே "
பொருள்:
எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் - நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம். (எந்தை - என் தந்தை, நான் + என் தந்தை என்று இருவரையும் இங்கு சுட்டுகிறது, மூத்தப்பன் - தந்தையின் தந்தை, தாத்தா)
திருவோணத் திருவிழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி - ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை வதம் செய்தவனை,
பந்தனைத் தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! - இரண்யகசிபு என்னும் அசுரனை அழித்த நரசிங்கத்தின் அசதித்தீரப் பல்லாண்டு பல்லாண்டென்று பாடுவோமாக!
E.mail: Shaanmugam@gmail.com,
Blog:http://saravananshanmugam.blogspot.com
VeeraVynavam:http://veeravynavam.blogspot.com
0 comments:
Post a Comment